சென்னை: பேருந்து நிற்காமல் சென்றதை தட்டிக்கேட்ட பயணி மீது தாக்குதல்

பேருந்து நிற்காமல் சென்றதை தட்டிக்கேட்ட பயணியை ஓட்டுநர், நடத்துநர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
சென்னை: பேருந்து நிற்காமல் சென்றதை தட்டிக்கேட்ட பயணி மீது தாக்குதல்
Published on

சென்னை,

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பூந்தமல்லி செல்வதற்காக நேற்றிரவு சரவண குருநாதன் என்ற பயணி காத்துக்கொண்டு இருந்தார். அப்போது பூந்தமல்லிக்கு செல்லும் (தடம் எண் 101) பேருந்து வந்தபோது சரவணகுருநாதன் ஓடிவந்து ஏற முயன்றார். அதற்குள் பேருந்து நிற்காமல் வேகமாக சென்றுவிட்டதாக தெரிகிறது.

இதனால் கோபம் அடைந்த சரவணகுருநாதன், டைம் கீப்பரிடம் சென்று கேட்டு வாக்குவாதம் செய்து உள்ளதாக தெரிகிறது. அப்போது டைம் கீப்பர், சரவணகுருநாதனின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்துவந்து தாக்கியுள்ளார். தொடர்ந்து அங்கிருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் ஓடிவந்து காலால் எட்டி உதைத்துள்ளனர். இதுபற்றி தட்டிக்கேட்ட சில பயணிகளையும் அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது.

நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் நடந்த இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், இதுதொடர்பாக கோயம்பேடு காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com