சென்னை மழை பாதிப்பு: உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது
சென்னை மழை பாதிப்பு: உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
Published on

சென்னை,

'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் நகர் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தொடர் மழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீர், சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை நீரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலசோனை மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com