

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர், சபீர்சிங். இவர், சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் ஏர்மேனாக பணியாற்றி வந்தார். வழக்கம்பேல நேற்றிரவு சபீர்சிங் பணிக்குச் சென்றுள்ளார். ரோந்துப்பணியின்போது, தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டு தற்கெலை செய்துகெண்டார்.
தகவல் அறிந்து, சேலையூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சபீர்சிங் உடலை பிரேத பரிசேதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
பணிச்சுமை காரணமாக சபீர்சிங் தற்கெலை செய்துகெண்டாரா அல்லது குடும்பப் பிரச்னையா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கெண்டுவருகின்றனர்.