

சென்னை,
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் மொத்தம் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 19 பேர் அடங்கிய சிறப்பு மருத்துவகுழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை காலை 10 மணிக்கு தலமைச்செயலகத்தில் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.