முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டுள்ளார் கவர்னர் தேவையில்லாத இடைஞ்சல் கொடுக்கிறார்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. பேட்டி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டு இருக்கிறார் என்றும், ஆனால் ராஜ்பவனில் இருந்துகொண்டு கவர்னர் தேவையில்லாத இடைஞ்சல் கொடுக்கிறார் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. கூறினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டுள்ளார் கவர்னர் தேவையில்லாத இடைஞ்சல் கொடுக்கிறார்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. பேட்டி
Published on

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டு இருக்கிறார் என்றும், ஆனால் ராஜ்பவனில் இருந்துகொண்டு கவர்னர் தேவையில்லாத இடைஞ்சல் கொடுக்கிறார் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. கூறினார்.

மிகப்பெரிய ஊழல்

முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. நேற்று ஈரோட்டில் அவருடைய இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் இதுவரை நடக்காத அளவுக்கு மிகப்பெரிய ஊழல் பிரதமர் மோடியின் ஆட்சியில் நடந்து இருக்கிறது. நாடு முழுவதும் சாலைகள் போடும் திட்டத்தின் ரூ.3 லட்சம் கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளது. மேலும், சுங்கச்சாவடிகளில் பணம் வசூல் செய்வதிலும் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்து உள்ளது.

இடைஞ்சல்கள்

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தந்துகொண்டிருக்கிறார். ஆனால், ராஜ்பவனில் இருந்து கொண்டு கவர்னர் ரவி தேவை இல்லாத இடைஞ்சல்கள் கொடுக்கிறார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக சைலேந்திரபாபுவை நியமித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நல்ல முடிவை கவர்னர் ஆர்.என்.ரவி தடுத்து இருக்கிறார். சைலேந்திர பாபு நல்ல அதிகாரி, சுயமரியாதை மிக்கவர், நேர்மையானவர் அவரை நியமிப்பது சரியானதுதான்.

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை வாயை திறந்தால் பொய்தான் கூறுகிறார். அவர் நடைபயணம் செல்லவில்லை. பஸ் பயணம் செய்கிறார். அவர் பேசுவதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.

நடிகர் ரஜினிகாந்த்

உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருக்கும் யோகி ஆதித்தியநாத் மீது 7 கொலை வழக்குகள் உள்ளன. அவரது காலை ரஜினி தொட்டு வணங்கியது சங்கடமாக இருக்கிறது. தமிழக மக்கள் அதிகம் பாசம் வைத்திருக்கும் ரஜினி இப்படி நடந்து கொண்டதை மனம் ஒப்பவில்லை.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி யாருக்கு வழங்க வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் முடிவு செய்வார்கள். தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களிலேயே மாணவர்கள் மனதில் சாதிய சிந்தனைகள் விதைப்பது தடுக்கப்பட வேண்டும். கைகளில் சாதி சின்னத்தை காட்டும் வண்ண கயிறுகள் கட்டுவதை தடுக்க வேண்டும். இல்லை என்றால் சாதிய கலவரங்கள் மிகுந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட நிர்வாகிகள் எஸ்.வி.சரவணன், திருச்செல்வம், ஈ.பி.ரவி, ராஜேஸ், விஜயபாஸ்கர், விஜயகண்ணா, கே.என்.பாஷா உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com