ஒமிக்ரான் வைரஸ்: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
ஒமிக்ரான் வைரஸ்: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை
Published on

சென்னை,

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசான ஒமிக்ரான் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு பயந்து பல நாடுகள் தங்கள் எல்லைகளை மூடியுள்ளன.

தென் ஆப்பிரிக்காவுக்கான விமான சேவைகளையும் ரத்து செய்திருக்கின்றன. இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசும் மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவிவிட கூடாது என்ற வகையில் மாநில அரசு கடும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு பணி தீவிரமாக்கப்பட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டு இருக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார்.

அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு காணொலி வாயிலாக இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com