ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்தாக இருக்கும் - ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி

மத்திய அரசின் ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்தாக இருக்கும் என ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்தாக இருக்கும் - ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி
Published on

சென்னை

கடந்த 2019 ஆம் ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 2021-இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும் திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்பட உள்ளன.

இந்த சட்டத்திருத்தம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறிவிடும் என சினிமா துறையை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யா, நடிகர் கமல்ஹாசன், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் இது குறித்த தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அரசின் ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவுக்கு ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மத்திய அரசு மீண்டும் படங்களை தணிக்கை செய்வது நியாயமற்றது. இந்த மசோதா மூலம் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு வரும். எந்த படத்தையும் நினைத்தபடி எடுக்க முடியாது. இயக்குநர் நினைக்கும் படைப்புகளை எடுக்க முடியாது. கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்தாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com