போடி அருகே பொதுமக்கள் சாலை மறியல்

போடி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
போடி அருகே பொதுமக்கள் சாலை மறியல்
Published on

போடி அருகே இளம்பெண் ஒருவர் தனது தாயுடன் நடந்து சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் பெண்ணின் கையை பிடித்து இழுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் போடி தாலுகா போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் பெதுமக்கள் இன்று இரவு போடி-தேவாரம் சாலையில் மறியல் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.Civilians block road near Bodi

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com