

சென்னை,
கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தலால் தமிழகத்தில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் மட்டும் முடிந்துள்ளன. ஆனால், கொரோனா அதிகரிப்பால் பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, வரும் திங்கட்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுகிறது.