

சென்னை,
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் வேகமுடன் நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில், கோவை ஆழியாறு அணையிலிருந்து வரும் 4ந்தேதி முதல் தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த தண்ணீர் திறப்பு மூலம் 22,332 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். முதல் அமைச்சரின் இந்த உத்தரவிற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.