

கோயம்பேடு,
சென்னையில் இயங்கி வரும் மிகப்பெரிய மார்க்கெட்டுகளில் ஒன்று கோயம்பேடு மார்க்கெட். சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு காய்கறி விற்பனை செய்யப்படும் பிரதான மார்க்கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் விளங்குகிறது. இங்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனை செய்ய வருகின்றன.
வருகிற நவம்பர் மாதம் 4-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வருகிற 5-ந்தேதி விடுமுறை என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.