கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

திருத்தணி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கோரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி குப்பம்மாள். கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் நிஷா (வயது 18). இவர் திருத்தணி அருகே உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி நிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மாணவி நிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மாணவி தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com