கோவில்களை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு

தமிழகத்தில் உள்ள கோவில்களை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோவில்களை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் அனைத்து கோவில்களையும் மேம்படுத்த உயர்நிலை ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு இன்று அரசாணையை வெளியிட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 17 பேர்கள் கொண்ட இந்த குழுவின் துணை தலைவராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை செயலாளர், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பதவி வழி அலுவல் சார் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

அலுவல் சாரா உறுப்பினர்கள் அடங்கிய குழுவில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஶ்ரீமத் வராக மகாதேசிகன், ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், சாந்தலிங்க மருதாசல அடிகளார், நீதியரசர் டி.மதிவாணன் (ஓய்வு), சு.கி.சிவம், கருமுத்து கண்ணன், சத்தியவேல் முருகனார்ர், இராமசுப்பிரமணியன், தரணிபதி ராஜ்குமார், மல்லிகார்ஜூன் சந்தான கிருஷ்ணன், ஶ்ரீமதி சிவசங்கர், தேச மங்கையர்க்கரசி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com