

சென்னை,
கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, மோட்டார் வாகன விபத்து தொடர்பாக போலி காப்பீடு கோரியது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சாலை விபத்துகளில் சிக்குபவர்களை 108 ஆம்புலன்ஸ்கள் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லாமல் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு எதிரான இந்த புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து, ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.