புகார் பெட்டி

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
புகார் பெட்டி
Published on

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கேள்விகுறியாகும் சுகாதாரம்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அய்யப்பன் நகர் 1-வது தெருவில் சாக்கடை அடைப்பால் சாக்கடை நீர் முழுவதும் ரோட்டில் தேங்கி உள்ளது. இதனால் இந்தப்பகுதியின் சுகாதாரம் கேள்விகுறியாகி உள்ளது. தொற்றுநோய் பரவும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கிய கழிவுநீரை அகற்ற வேண்டும். ஜெகதீசன், ஒத்தக்கடை.

குடிநீரில் கழிவுநீர்

மதுரை மாவட்டம் பீ.பி.குளம் கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் நோய் பாதிப்புக்குள்ளாகி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க வேண்டும். மணி, பீ.பி.குளம்

ஒளிராத தெருவிளக்குகள்

மதுரை மாநகராட்சி 23-வது வார்டு கீழகைலாசபுரம் 2-வது தெரு பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். ஆகவே தெருவிளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தனகுமார், கீழகைலாசபுரம்.

மின் தகனமேடை வேண்டும்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள பொதுமயானத்தில் மின்தகன மேடை வசதி கிடையாது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லிங்கேஸ்வரன், வாடிப்பட்டி.

தேங்கும் குப்பைகள்

மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் யூனிவர்சல் தெரு, வி.பி. சித்தன் தெரு, மேட்டுத்தெருக்களில் கடந்த ஒரு வாரமாக குப்பை வண்டிகள் வருவது இல்லை. இதனால் சாலையோர குப்பைத்தொட்டியில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. தேங்கிய குப்பைகளால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருப்பையா, பெத்தானியாபுரம். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com