ஏதாவது இடையூறு இருந்தால்வடமாநில தொழிலாளர்கள் செல்போனில் புகார் தெரிவிக்கலாம்

ஏதாவது இடையூறு இருந்தால் வடமாநில தொழிலாளர்கள் செல்போனில் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறி உள்ளார்.
ஏதாவது இடையூறு இருந்தால்வடமாநில தொழிலாளர்கள் செல்போனில் புகார் தெரிவிக்கலாம்
Published on

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வெளிமாநிலங்களை சார்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கோழிப்பண்ணைகள், கட்டுமான நிறுவனங்கள், தறிபட்டறைகள், விவசாயம் மற்றும் இதர பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இப்புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்கள் இல்லாத வண்ணம் பாதுகாப்பான சூழ்நிலையில் பணிபுரியும் பொருட்டு உரிய பாதுகாப்பினை ஏற்படுத்தி தர தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே புலம்பெயர் தொழிலாளர்களை பணிகளில் ஈடுபடுத்தியுள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள் அவர்களை பாதுகாப்பான சூழ்நிலையில் தங்க வைப்பதுடன், ஏதாவது பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் அதுகுறித்த விவரத்தினை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும் நாமக்கல் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை 04286-299137 என்ற எண்ணிலும், நாமக்கல் தொழிலாளர் நல உதவி ஆணையரை 81220 21667 என்கிற செல்போன் எண்ணிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை94981 81216 என்ற எண்ணிலும் நேரிடையாக தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com