

திருநெல்வேலி உட்கோட்ட ரெயில்வே போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று மதியம் ஜார்கண்ட் மாநிலம் பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் ரயில் நிலையம் வரை கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ரயிலின் முன்பக்க பொது பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில் 10 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து ரயில்வே போலீஸ் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.