இருதரப்பினர் இடையே மோதல்; 2 பேர் கைது

செல்போன் இரவல் கேட்டதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இருதரப்பினர் இடையே மோதல்; 2 பேர் கைது
Published on

ஆம்பூர் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 23). இவர் கடந்தசில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் ஆம்பூர் பைபாஸ் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் செல்போன் இல்லை, எனக் கூறப்படுகிறது. அங்குள்ள ஒரு இரும்புக்கடை அருகே ஒரு வாகனத்தில் பாரம் ஏற்றிக்கொண்டிருந்தவர்களிடம் சென்று ஆறுமுகம் பேசுவதற்காக செல்போன் இரவல் கேட்டுள்ளார்.

அவருக்கு, அவர்கள் செல்போன் தர மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆறுமுகத்துக்கும், அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. அதில் ஆறுமுகம் தரப்பினர் தாக்கியதால் ஆம்பூர் புதுமண்டியைச் சேர்ந்த கதிரவன் (வயது 41), அழகாபுரியைச் சேர்ந்த சுரேஷ் (37), மணிகண்டன் (34), குணசேகரன் (33) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஆறுமுகம் தரப்பில் அவரின் நண்பர் விமல் படுகாயம் அடைந்தார்.

படுகாயம் அடைந்தவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதில் கதிரவன் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம், ரஞ்சித் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விமல் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com