இருதரப்பினர் இடையே மோதல்; 5 பேர் மீது வழக்கு

களம்பூர் அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இருதரப்பினர் இடையே மோதல்; 5 பேர் மீது வழக்கு
Published on

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரை அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் பச்சையம்மாள் என்பவர் இறந்துவிட்டார். இதனால் நரேஷ்குமார் (வயது 21) என்பவர் அங்கு மோளம் அடிக்க சென்றுள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த கேசவன் (34) என்பவர் இறுதி ஊர்வலம் செல்லும் போது நடுரோட்டிலேயே நிறுத்தி மோளம் அடிக்க சொல்லி தகராறு செய்துள்ளார்.

அப்போது நரேஷ்குமார் நான் மேளம் அடித்துக்கொண்டே செல்கிறேன், இறுதி ஊர்வலம் நடுரோட்டில் நிற்கக்கூடாது என சொல்லி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கேசவன், நரேஷ்குமார் அடித்துக்கொண்டிருந்த மோளத்தை காலால் எட்டி உதைத்து கிழித்துள்ளார். இதற்கிடையில் நரேஷ்குமாரின் சகோதரர்கள் கமல், ராகவேந்திரன் ஆகியோருக்கும் கேசவன், அவரது தம்பி நாகராஜுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து இருதரப்பினரும் களம்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் நரேஷ்குமார், கமல், ராகவேந்திரன் மற்றும் கேசவன், நாகராஜ் ஆகிய 5 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com