நிலவில் தடம் பதிக்கவுள்ள விக்ரம் லேண்டர் - நடிகர் மாதவன் வாழ்த்து

சந்திரயான் - 3 நிச்சயம் வெற்றி பெறும். என் வார்த்தையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என நடிகர் மாதவன் கூறியுள்ளார்.
நிலவில் தடம் பதிக்கவுள்ள விக்ரம் லேண்டர் - நடிகர் மாதவன் வாழ்த்து
Published on

சென்னை,

சந்திரயான்-3 லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணி இன்று மாலை 6.04க்கு தொடங்கும் எனவும், இஸ்ரோ தானியங்கி இறங்கு இயக்கத்தை இயக்கியவுடன் லேண்டர் வாகனம் படிப்படியாக இறங்கத் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவலின்படி, தானியங்கி தரையிறங்கும் பணி (ALS) தொடங்க அனைத்தும் தயாராக உள்ளன. இன்று மாலை 6.04 மணிக்கு நியமிக்கப்பட்ட இடத்தில் லேண்டர் மாட்யூலின் (LM) தரையிறங்கும்.

தானியங்கி கட்டளையைப் பெற்றவுடன், லேண்டர் மாட்யூலின் ஆனது திரோட்டில் செய்யக்கூடிய என்ஜின்களை இயக்குகிறது. மிஷன் ஆபரேஷன்ஸ் குழு கட்டளைகளின் வரிசையான செயல்பாட்டை உறுதிசெய்து கொண்டே இருக்கும். விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காணலாம் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

இந்நிலையில், சந்திரயான் - 3 நிச்சயம் வெற்றி பெறும். என் வார்த்தையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அற்புதமான வெற்றியை பெறப்போகும் இஸ்ரோவுக்கும், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கும் என வாழ்த்துக்கள் என நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் நடிகர் மாதவன் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com