

ராஜாக்கமங்கலம்,
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து ராஜாக்கமங்கலம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமையில் ராஜாக்கமங்கலம் சந்திப்பில் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி. உதயம் போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.