புதிய தாசில்தார் அலுவலகம் கட்டும்பணி தீவிரம்

புதிய தாசில்தார் அலுவலகம் கட்டும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
புதிய தாசில்தார் அலுவலகம் கட்டும்பணி தீவிரம்
Published on

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்பில் புதிதாக அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக கடந்த ஜனவரி மாதம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். தற்போது இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக முதலில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கட்டிடத்தில் நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. அதனைத்தொடர்ந்து புதிதாக நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்ட பின்னர் இங்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறைகள் செயல்பட்டு வந்தன. கட்டிடம் பாழடைந்த நிலையில் புதிய கட்டிடம் கட்ட அமைச்சர் அடிக்கல் நாட்டினார். இந்த புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அனைத்து துறைகளும் செயல்பட தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com