

இதுதொடர்பாக அவர் மீது பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலீசில் புகார் செய்தனர்.நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் கமல்ஹாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டு வள்ளியூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி கமல்ஹாசன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அவர் மீதான வழக்கை விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு கடந்த சில வருடங்களாக நிலுவையில் இருந்தது. இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் தரப்பில், இதுபோன்ற சர்ச்சைகள் எதிர்காலங்களில் இருக்காது என உறுதி அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடிகர் கமல்ஹாசன் மீது வள்ளியூர் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார்.