சென்னை, ஆவடி, ஊட்டி நிலையங்களில் உள்ள ராணுவ ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை, ஆவடி, ஊட்டி நிலையங்களில் உள்ள ராணுவ ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று தொடங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் 166 மையங்களில் இந்த கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்தியாவில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை மையங்களில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல், பாதுகாப்பு துறையிலும் உள்ள சுகாதார ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் தென் பிராந்திய தலைமைக்கு கிழ் செயல்பட்டு வரும் சென்னை, ஆவடி, ஊட்டியில் உள்ள வெலிங்டன் ஆகிய ராணுவ நிலையங்களிலும் உள்ள ராணுவ சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

மேலும் திருவனந்தபுரம், கண்ணூர், பெங்களூரு, பெல்காம், செகந்திராபாத் ஆகிய ராணுவ நிலையங்களிலும் விரைவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com