நாமக்கல்லில் நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவ பயிற்சி

நாமக்கல்லில் நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவ பயிற்சி
Published on

நாமக்கல் கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் கோபாலகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல்லில், திருச்சி சாலையில் கால்நடை ஆஸ்பத்திரி வளாகம் அமைந்துள்ளது. அங்குள்ள கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் "நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு" என்ற தலைப்பில் பண்ணையாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் (ஜூன்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க விரும்புவோர் நாமக்கல் கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 04286233230 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com