

திண்டுக்கல்,
திண்டுக்கல்லில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில், கைதான கலீல் ரகுமானுக்கு, நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி, திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், கலீல் ரகுமான் என்ற இளைஞர், கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முன்றார். பின்னர், அங்கிருந்த ஊழியர் இளைஞரை தாக்கி, போலீசில் ஒப்படைத்தார்.
இந்த வழக்கில், ஜாமின் வழங்கக்கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கலீல் ரகுமான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிபந்தனையுடன் அவருக்கு ஜாமின் வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது.