பட்டாசுக்கு சுற்று சூழல் விதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்: சிவகாசியில் விஜயகாந்த் பேச்சு

பட்டாசுக்கு சுற்று சூழல் விதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சிவகாசியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசியுள்ளார். #Vijayakanth
பட்டாசுக்கு சுற்று சூழல் விதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்: சிவகாசியில் விஜயகாந்த் பேச்சு
Published on

சிவகாசி,

சுற்று சூழல் பட்டாசுகளால் மாசுபடுகிறது என நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. பட்டாசு உற்பத்தி பாதிப்படைந்து உள்ளதுடன் தொழிலாளர்களின் வாழ்வும் பாதிக்கப்பட்டு உள்ளது.

பட்டாசுக்கு சுற்று சூழல் விதியில் இருந்து விலக்கு அளிக்க கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டாசுக்கு சுற்று சூழல் விதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கூறி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிவகாசியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் ஆர்ப்பாட்டத்தில் பேசும்பொழுது, பட்டாசு ஆலைகளின் வேலை நிறுத்தத்தினால் 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைந்து உள்ளனர். பட்டாசுக்கு சுற்று சூழல் விதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பட்டாசு நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.

சீனாவில் இருந்து பட்டாசு இறக்குமதி செய்யப்பட்டால் சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார். பேருந்து கட்டண உயர்வு எல்லோரையும் பாதித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

#Vijayakanth #Crackers

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com