கிரைம்செய்திகள்

கிரைம்செய்திகள்
கிரைம்செய்திகள்
Published on

லாட்டரி சீட்டுகள் விற்ற வாலிபர் கைது

*தொட்டியம் ஒன்றியம் உன்னியூரில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 23). என்பவரை காட்டுப்புத்தூர் போலீசார் கைது செய்தனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

*உப்பிலியபுரம் கொப்பம்பட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் ஜெயக்கொடி (45). இவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக உப்பிலியபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்து 60 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காருக்குள் டிரைவர் பிணம்

*திருச்சி பாலக்கரை சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). இவர் சொந்தமாக கார் வைத்துள்ளார். அந்த காருக்கு திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த ராஜா என்கிற எட்வர்டு ஆரோக்கியராஜ் (53) என்பவர் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் காரை ஓட்டி சென்று மேலப்புதூர் பகுதியில் உள்ள பள்ளி அருகே நிறுத்திவிட்டு காருக்குள் படுத்து கிடந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பகலில் காரை திறந்து பார்த்தபோது, காருக்குள் அவர் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலில் திருட்டு

*திருச்சி கருமண்டபம் ஜெயாநகரில் வெற்றிவிநாயகர் கோவில் உள்ளது. வழக்கம்போல் கடந்த 9-ந்தேதி இக்கோவிலில் பூஜை நடத்தி விட்டு அர்ச்சகர் சுப்பிரமணி வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலை கோவிலை திறக்க வந்தபோது, கோவிலின் இரும்புகேட் மற்றும் மரக்கதவின் பூட்டு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.11 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து அவர் கோவில் செயலரிடம் தெரிவித்தார். இதனையடுத்து கோவில் செயலர் விஜயராகவன் செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து,கோவிலில் திருடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com