கடலூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது - டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்

கடலூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் தான் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது என்று மருத்துவத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடலூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது - டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்
Published on

சென்னை,

இது குறித்து சென்னையில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

போலியோவை போல் கொரோனா ஒழிக்கப்பட்ட நோய் அல்ல என்பதை மக்கள் உணர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். கடலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. டெங்குவால் இந்த ஆண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 20 லட்சம் பேர் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதது சவாலாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 32,017 இடங்களில் 5-வது தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. 48.6 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும் 7 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com