அரியானா மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு

அரியானா மாநிலத்தில் வரும் 14-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அரியானா மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு
Published on

சண்டிகர்,

அரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு மேலும் ஒரு வாரத்திற்கு வரும் 14-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளுக்கு அரியானா மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மால்கள் திறக்க அனுமதிக்கப்படும். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 21 பேர் வரை மத இடங்களில் ஒன்றுகூடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் 21 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 50 சதவீத இருக்கை வசதியுடன் உணவகங்கள், பார்கள் மற்றும் கிளப் வீடுகள் திறக்க அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்ட தளர்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com