45-வது நாள்: அத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்!

காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளின் நள்ளிரவில் குடும்பத்துடன் ரஜினிகாந்த் தரிசித்தார்.
45-வது நாள்: அத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்!
Published on

சென்னை,

காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளான இன்று இளஞ்சிவப்பு பட்டாடையில் ராஜமகுடம் அணிந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க பல லட்சம் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

நின்ற கோலத்தில் வசந்த மண்டபத்தில் அருள் பாலிக்கும் அத்தி வரதரை நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் நள்ளிரவில் தரிசனம் செய்தார்.

நேற்று இரவு சுமார் 12.30 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த் அவரது குடும்பத்துடன் வந்து அத்திவரதரை தரிசித்தார்.

ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடியவிருக்கும் நிலையில் இன்று காலை முதல் தற்போது வரை சுமார் 50 ஆயிரம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். மேலும் 2 லட்சம் பேர் தரிசிக்க காத்திருக்கின்றனர். இது இறுதிக்கட்டம் என்பதால் மக்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com