

சென்னை,
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதாக விவாதம் நடந்து வருகிறது. இன்று (திங்கட்கிழமை) வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. முதலில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும் மானியக் கோரிக்கை விவாதம் தொடங்குகிறது.
இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பதில் அளித்து பேசுகிறார்கள். இறுதியாக, தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுகின்றனர்.