மதுரை அருகே டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு

முன்விரோதம் காரணமாக டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை அருகே டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு கிராமத்தில் நள்ளிரவில் நவீன்குமார் என்பவர் மீது டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டுள்ளது. டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் கார் அருகே நின்றிருந்த நவீன் குமார் காயமடைந்தார். குண்டு வீச்சில் கையில் காயமடைந்த நவீன்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த குண்டு வீச்சு சம்பவத்தின்போது நவீன் குமாருக்கு அருகே நின்றிருந்த ஆட்டோ டிரைவர் கண்ணன் என்பவரும் லேசான காயம் அடைந்துள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கீழவளவு போலீசார், டிபன் பாக்ஸ் குண்டு வீசியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக நவீன் குமார் மீது டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதாக தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் பணியாற்றியபோது நவீன் குமாருக்கும் மற்றொரு குழுவினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com