சிவகாசியில் வளர்ச்சி திட்ட பணிகள்

சிவகாசியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
சிவகாசியில் வளர்ச்சி திட்ட பணிகள்
Published on

சிவகாசி, 

சிவகாசியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட மேலாமத்தூர் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் வீரணம்புலி புது கண்மாய் வரத்துக்கால்வாயில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், வடமலாபுரம் பஞ்சாயத்தில் ரூ.13 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் வரத்துக்கால்வாயில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் ஜயசீலன் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ள சிமெண்டு தளம் மற்றும் வாருகால் பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த. ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புகழேந்தி, தேவஆசிர்வாதம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com