கடத்தூர் அருகேகிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு

கடத்தூர் அருகேகிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
Published on

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள ஒசஅள்ளி கிராமத்தை சேர்ந்த சண்முகம் மனைவி வசந்தா (வயது 67). இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான விவசாய கிணற்றில் மோட்டார் எடுத்து விட சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அப்போது உறவினரான பூவேந்தன் என்பவர் அங்கு சென்றபோது வசந்தா கிணற்றில் மிதந்துவாறு இருந்துள்ளார். இதை பார்த்து அவர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து இறந்தவரின் கணவர் சண்முகம் தனது மனைவி கிணற்றில் மின்மோட்டாரை இயக்க சென்றபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனவும், சாவில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கடத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com