இயக்குநர் கஜேந்திரன் மறைவு தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் - சீமான்

இயக்குநர் கஜேந்திரன் மறைவு தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு என சீமான் கூறியுள்ளார்.
இயக்குநர் கஜேந்திரன் மறைவு தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் - சீமான்
Published on

சென்னை,

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமானவர் டி.பி.கஜேந்திரன்(வயது68). இவர் கே. பாலசந்தர், விசு, ராம நாராயணன் போன்றோரிடம் 60 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மேலும், எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் டி.பி. கஜேந்திரன்.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில வயது மூப்பு காரணமாக இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று காலை காலமானார். இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவரது மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

திரைப்பட இயக்குநரும், நடிகருமான அன்புச்சகோதரர் கஜேந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். குறைந்த பொருட்செலவில் பல வெற்றிப்படைப்புகளை தந்த பெருமைக்குரிய திரைக்கலைஞர் கஜேந்திரன் அவர்களின் மறைவு தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அண்ணன் கஜேந்திரன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com