மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

கொரடாச்சேரி:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 11-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் மன்னார்குடி கோட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம். மேலும் மாற்றுத்திறனாளிக்கு ஒருங்கிணைந்த அடையாள அட்டைபெற இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இருப்பிட முகவரிக்கான ஆதாரம், குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளஅட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் மற்றும் தற்போதைய புகைப்படத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம். இதற்கு முன்பு விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com