1,175 பள்ளிகளுக்கு 3-ம் பருவ பாட புத்தகங்கள் அனுப்பும் பணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,175 பள்ளிகளுக்கு 3-ம் பருவ பாட புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது
1,175 பள்ளிகளுக்கு 3-ம் பருவ பாட புத்தகங்கள் அனுப்பும் பணி
Published on

கள்ளக்குறிச்சி

1,175 பள்ளிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 699 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி தொடக்கப்பள்ளிகள், 232 நடுநிலைப் பள்ளிகள், 11 உயர்நிலைப் பள்ளிகள், 133 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,175 பள்ளிகள் உள்ளன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு பின்னா நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

நாளை திறக்கப்படுகிறது

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நாளை(வியாழக்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறது. பள்ளிக்கூடங்கள் திறந்த முதல் நாளிலேயே 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 3-ம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.இதையடுத்து பாட புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் அந்தந்த வட்டார கல்வி அலுவலகங்களில் இருந்து அந்தந்த பகுதி பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.

தியாகதுருகத்தில்

அந்த வகையில் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 84 பள்ளிகளுக்கு 3-ம் பருவ பாட புத்தகங்களை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று உதவி வட்டார தொடக்க கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், செலின்மேரி, கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமை ஆசிரியர்களிடம் பாட புத்தகங்களை வழங்கினார்கள். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மினிலாரி, ஆட்டோ போன்ற வாகனங்களில் வந்து 3-ம் பருவ பாட புத்தகங்களை பெற்று சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com