

நெல்லை கண்டியப்பேரி பகுதி- 1 கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் செல்வராஜ் மனைவி பராசக்தி (வயது 42). இவர் சம்பவத்தன்று நெல்லை சந்திப்பு அரவிந்த் ஆஸ்பத்திரி முன்பு இருந்து பேட்டைக்கு தனியார் பஸ்சில் சென்றார். அப்போது அந்த பஸ்சின் கண்டக்டரான வீரவநல்லூர் சன்னதி தெருவை சேர்ந்த ரெங்கசாமி மகன் விவேகானந்தன் (47) என்பவர் டிக்கெட் கொடுத்துவிட்டு சில்லறை கேட்டு தகராறு செய்ததாகவும், அதற்கு பஸ் டிரைவரான சீவலப்பேரியை சேர்ந்த செல்வம் (32) உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தன், செல்வம் ஆகியோரை கைது செய்தனர்.