தி.மு.க. முகவர்கள் ஆலோசனை கூட்டம்

நாங்குநேரியில் தி.மு.க. முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தி.மு.க. முகவர்கள் ஆலோசனை கூட்டம்
Published on

இட்டமொழி:

நாங்குநேரியில் மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தலைமை தாங்கினார். நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன், தொகுதி பார்வையாளர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி பாக முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் வாசுதேவன் பண்ணையார், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் வி.இஸ்ரவேல் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின், பஞ்சாயத்து தலைவர்கள் எஸ்.கே.சீனிதாஸ் (ஆழ்வாநேரி), எஸ்.செந்தில்வேல் (கரந்தாநேரி), மறுகால்குறிச்சி துணைத்தலைவர் புஷ்பபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர் அணி சார்பில் அம்பையில் விவசாய கருத்தரங்கம் நடைபெற்றது. விவசாய அணி தலைவர் அருண்தவசுபாண்டியன் தலைமை தாங்கினார். விவசாய அணி மற்றும் விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் நடராஜன், பாபநாசம், ஆறுமுகம், சண்முகவேல், பூதப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராஜபாண்டியன் வரவேற்றார். நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன், விவசாய தொழிலாளர் அணி மாநில துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் அம்பை நகர செயலாளர் கே.கே.சி.பிரபாகரன், அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர், மாவட்ட துணை செயலாளர் மாஞ்சோலை மைக்கேல், விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கணேசன், மணிமுத்தாறு நகர செயலாளர் முத்து கணேசன், பிரம்மதேசம் பஞ்சாயத்து தலைவர் ராம்சங்கர், சிவந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் மாடசாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கருத்தரங்கில் பாசனகால்வாய் செல்லும் பகுதிகளில் சிமெண்டு தளம் மற்றும் மதகுகளில் ஷட்டர்களை பழுதி நீக்கி சரி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாய அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com