பிப்ரவரி 3-ந் தேதிக்கு பிறகு திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை?

தமிழகத்தில் இந்த முறை 4 முனைப்போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது.
பிப்ரவரி 3-ந் தேதிக்கு பிறகு திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை?
Published on

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாத கால இடைவெளியே இருக்கின்றன. அடுத்த மாதம் இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தலில் களம் காண விரும்பும் அரசியல் கட்சிகள் எல்லாம், கூட்டணியை இறுதி செய்து, தொகுதி பங்கீட்டையும் முடித்து, வேட்பாளர்களையும் தேர்வு செய்து தயாராக வைத்திருக்க வேண்டும்.

இந்த முறை தமிழகத்தில் 4 முனைப்போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு அணி, ஆண்ட கட்சியான அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணி, த.வெ.க. தலைமையில் இன்னொரு அணி, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என 4 முனைப்போட்டி நிலவுகிறது.

தி.மு.க. பலம் வாய்ந்த கூட்டணியுடன் களம் காண இருக்கிறது. கடந்த தேர்தலின்போது உள்ள கூட்டணியைவிட கூடுதலாக இப்போது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் கைகோர்த்துள்ளது. அதுபோக பா.ம.க. ராமதாஸ் அணியையும், தே.மு.தி.க.வையும் கூட்டணி வளையத்துக்குள் கொண்டுவர பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எல்லாம், இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் என்று கூறிவருகின்றன. ஆனால், வெளிப்படையாக இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கப்படவில்லை. கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு அப்போதைய எண்ணிக்கையிலான தொகுதிகளே மீண்டும் ஒதுக்கப்படுவதாக தெரிகிறது.

இந்த நிலையில், பிப்ரவரி 3-ந் தேதிக்கு பிறகு கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்க திமுக திட்டமிட்டுள்ளது. கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவை மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்கவுள்ளார். 2 மாதங்களாக பேச்சுவார்த்தைக்கு காத்திருப்பதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியநிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com