அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் - மாவட்ட கலெக்டர்களுக்கு முதல் அமைச்சர் அறிவுறுத்தல்

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட மாவட்ட கலெக்டர்கள் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும். என கூறினார்.
அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் - மாவட்ட கலெக்டர்களுக்கு முதல் அமைச்சர் அறிவுறுத்தல்
Published on

சென்னை,

கடந்த ஜனவரி 30-ம் தேதி 11 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 30 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட கலெக்டர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல் நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர் கூறியதாவது ,

புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியாளர்கள் பொறுப்புடன் தங்கள் கடமையை ஆற்ற வேண்டும். என்னென்ன பணிகள் நடைபெறாமல் இருகிறது, என்னென்ன பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். .

சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். உங்களிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டு விட்டன என நாங்கள் அதனை கண்டுகொள்ளாமல் இருக்க போவதில்லை. தலைமை செயலர் அவ்வப்போது சோதனை செய்வார். அதே போல, நானும் ஆய்வு செய்வேன். அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்"

மாவட்ட ஆட்சியர்கள் சட்டம் ஒழுங்கை பேணி காக்க வேண்டும்.புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும். என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com