தி.மு.க. பொதுக்குழுவுக்கு செல்போன் எடுத்து செல்லக்கூடாது - கட்சி தலைமை வலியுறுத்தல்

தி.மு.க. பொதுக்குழுவுக்கு யாரும் செல்போன்களை எடுத்து செல்லக்கூடாது என்று கட்சி தலைமை வலியுறுத்தி உள்ளது.
தி.மு.க. பொதுக்குழுவுக்கு செல்போன் எடுத்து செல்லக்கூடாது - கட்சி தலைமை வலியுறுத்தல்
Published on

சென்னை,

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வரும் 9-ந் தேதி காணொலி காட்சி வழியாக நடக்கிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தபடியே பொதுக்குழு உறுப்பினர்கள், காணொலி வழியாக நடக்கும் பொதுக்குழுவில் பங்கேற்கின்றனர். பொதுக்குழு உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் வகையில் மாவட்டங்களில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அங்கிருந்தபடியே, நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக உரையாற்றுகிறார்.

இது தொடர்பாக தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாவட்டம் வாரியாக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள இடங்கள் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, சென்னை வடக்கு-ராயபுரம் அறிவகம், சென்னை கிழக்கு-புரசைவாக்கம் லட்சுமி மஹால், சென்னை மேற்கு-அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கம், சென்னை தெற்கு- சாய் கிருஷ்ணா சைதாப்பேட்டை.

திருவள்ளூர் கிழக்கு-கவரப்பேட்டை, திருவள்ளூர் தெற்கு-தண்டூரை, பட்டாபிராம், காஞ்சீபுரம் வடக்கு-என்.பி.ஆர்.நகர் கூடுவாஞ்சேரி, காஞ்சீபுரம் தெற்கு-கலைஞர் பவள விழா மாளிகை, வேலூர் கிழக்கு-சிப்காட், ராணிப்பேட்டை, வேலூர் மத்தியம்- வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில், வேலூர் மேற்கு-வாணியம்பாடி.

திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு-மாவட்ட கட்சி அலுவலகம், விழுப்புரம் வடக்கு-சந்தைதோப்பு, விழுப்புரம் மத்தியம்-கலைஞர் அறிவாலயம், கள்ளக்குறிச்சி வடக்கு-மாவட்ட கட்சி அலுவலகம், கள்ளக்குறிச்சி தெற்கு-தியாக துருகம், கடலூர் கிழக்கு-பண்ருட்டி சாலை, வடலூர். கடலூர் மேற்கு-நெய்வேலி தொ.மு.ச. அலுவலகம், தஞ்சை வடக்கு-கும்பகோணம். தஞ்சை தெற்கு-கலைஞர் அறிவாலயம், நாகை வடக்கு-மயிலாடுதுறை, நாகை தெற்கு- நாகப்பட்டினம்.

திருவாரூர்-விளமல், திருச்சி வடக்கு, தெற்கு, மத்தியம்-திருச்சி மாவட்ட கட்சி அலுவலகம். பெரம்பலூர்-துறைமங்கலம், அரியலூர்-ராஜாஜிநகர், கரூர்-அழகம்மை மகால், புதுக்கோட்டை வடக்கு, தெற்கு-புதுக்கோட்டை, சேலம் கிழக்கு- கட்சி அலுவலகம். சேலம் மேற்கு-வைகுந்தம், சேலம் மத்தியம்-பேர்லேன்ஸ், சேலம். நாமக்கல் கிழக்கு-நாமக்கல், நாமக்கல் மேற்கு-திருச்செங்கோடு, தர்மபுரி-கட்சி அலுவலகம், கிருஷ்ணகிரி கிழக்கு- கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மேற்கு-தளி சாலை, ஓசூர். கோவை வடக்கு-பொள்ளாச்சி, கோவை கிழக்கு-பீளமேடு.

கோவை மாநகர் கிழக்கு-சூலூர், கோவை மாநகர் மேற்கு-சரவணம்பட்டி, திருப்பூர் வடக்கு-கட்சி அலுவலகம், திருப்பூர் தெற்கு-கட்சி அலுவலகம், ஈரோடு வடக்கு-கவுந்தபாடி, ஈரோடு தெற்கு-கட்சி அலுவலகம், நீலகிரி-எம்.பி. அலுவலகம். மதுரை வடக்கு, தெற்கு-திருப்பாலை-நத்தம் மெயின்ரோடு, மதுரை மாநகர்-பசுமலை, திண்டுக்கல் கிழக்கு-தாடிக்கொம்பு சாலை, தேனி-கம்பம், ராமநாதபுரம்-ராமநாதபுரம், சிவகங்கை-காரைக்குடி, விருதுநகர் வடக்கு-மல்லாங்கிணறு, நெல்லை கிழக்கு- பாளையங்கோட்டை, நெல்லை மேற்கு-தென்காசி, நெல்லை மத்தியம்-பாளையங்கோட்டை, தூத்துக்குடி வடக்கு-கலைஞர் அரங்கம், தூத்துக்குடி தெற்கு-வீரப்பாண்டி பட்டணம், கன்னியாகுமரி கிழக்கு-கட்சி அலுவலகம், கன்னியாகுமரி மேற்கு-கருங்கல்.

அழைப்பு பெற்றவர்கள் மட்டுமே கூட்டரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். யாரும் செல்போன் எடுத்து செல்லக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com