ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? கமல்ஹாசன் கேள்வி

ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? கமல்ஹாசன் கேள்வி
Published on

சென்னை,

மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாடு முழுவதும் பல நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். இதேபோன்று சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கும் அவர் தனது கண்டனங்களை தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கண்ணுக்கெட்டா தொலைவில் பறப்பவை எவை என்கிறீர்களா? பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டுக்கும் பக்கத்தில் பறப்பது சமையல் எரிவாயுதான். ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? அந்த நெருப்பு ஆபத்தானது என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் நலம்பெற வேண்டும் என்று பதிவிட்டு உள்ளார்.

அவர் வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் உடல்நிலை குறித்து வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன. அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன் என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com