தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வரைவு வாக்காளர் பட்டியலை சத்தியபிரத சாகு இன்று வெளியிடுகிறார்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 2021 ஜனவரி 1-ந்தேதியன்று 18 வயது முடிந்தவர்களாக (வாக்காளராகும் நாளாக) கணக்கிட்டு சிறப்பு சுருக்கமுறை திருத்த பணியை மேற்கொள்ளுமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, ஒருங்கிணைந்த வை-+ரவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு இன்று (திங்கட்கிழமை) காலை 11.30 மணிக்கு தலைமைச்செயலகத்தில் இருந்தவாறு வெளியிட உள்ளார். இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களுடைய பெயர் விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.

பெயர் சேர்க்க விரும்புபவர்கள், ஆட்சேபனை தெரிவிப்பவர்களுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 15-ந்தேதி வரையிலும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் பெயர் சேர்க்க, நீக்க விரும்புபவர்கள், திருத்தம் செய்ய விரும்புபவர்கள், இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.

அந்த விண்ணப்பங்களை வாக்குச்சாவடி அதிகாரி அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது உதவி அதிகாரியிடம் அனைத்து வேலை நாட்களிலும் கொடுக்கலாம்.

வருகிற 21, 22-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 12 மற்றும் 13-ந்தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் உள்ள வாக்குச்சாவடி அதிகாரியிடமும் விண்ணப்பங்களை வழங்கலாம். இவ்வாறு கொடுக்கப்படும் விண்ணப்பத்துடன் வயது, முகவரி ஆகியவற்றை உறுதி செய்யும் சான்றிதழ்களும் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.

இவ்வாறு பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்காக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் ஜனவரி மாதம் 5-ந்தேதியன்று இறுதி செய்யப்பட உள்ளது. இதனைதொடர்ந்து ஜனவரி 15-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com