வாய்க்கால் தூர்வாரும் பணி

மேக்கிரிமங்கலம் ஊராட்சியில வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்தது.
வாய்க்கால் தூர்வாரும் பணி
Published on

குத்தாலம்:-

குத்தாலம் ஒன்றியத்தில் மேக்கிரிமங்கலம், ஆனாங்கூர், குச்சிபாளையம் ஆகிய ஊர்களில் உள்ள பெரிய மதகு வாய்க்கால், சின்ன மதகு வாய்க்கால், ஓடக்கரை வாய்க்கால்கள், மணவெளி வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு வாய்க்கால்கள் 13 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று, குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் பார்வையிட்டு ஆய்வு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது.அதில் ஒரு பகுதியாக மேக்கிரிமங்கலம் ஊராட்சியில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் வடிவதற்கும், விவசாயிகளுக்கு பாசனத்திற்கும் ஏதுவான வகையில் இருக்கும் என்றார்.இந்த ஆய்வின் போது மேக்கிரிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன்மற்றும் ராஜேந்திரன், மாரியப்பன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com