குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்

பழனியில் குழாய் உடைந்து சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.
குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்
Published on

பழனி ரணகாளியம்மன் கோவில் பகுதியில் நால்ரோடு சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆகையால் அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பகுதி வழியே செல்லும் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டது. இதற்கிடையே குழாய் உடைந்த பகுதியில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே நால்ரோடு சந்திப்பு பகுதியில் குழாய் உடைப்பை சரிசெய்து சாலையை நகராட்சி அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com