

தேனி பள்ளிவாசல் தெரு கொட்டக்குடி ஆற்றங்கரையில் தேனி அல்லிநகரம் நகராட்சியின் நவீன எரிவாயு தகனமேடை உள்ளது. அல்லிநகரம் கிராமகமிட்டி சார்பில் இந்த தகனமேடை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த தகனமேடையில் பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) 3 நாட்கள் நடக்கிறது. இதனால் இந்த நாட்களில் தகனமேடை செயல்படாது. இந்த நாட்களில் பழைய நடைமுறையில் விறகு வைத்து எரியூட்டுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிராம கமிட்டியினர் தெரிவித்தனர்.