மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தமிழ்ச்செல்வி எடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. திருவாரூர் கோட்ட மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் தலைமையில் துர்காலயா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திருவாரூர் நகர், புறநகர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், திருவாஞ்சியம், ஆலங்குடி, வலங்கைமான், பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி மற்றும் அதம்பார் பகுதிகளுக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்புடைய குறைகளை நேரில் விண்ணப்பம் மூலம் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com