எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் 'பாஸ்' - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் 'பாஸ்' - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
Published on

சென்னை,

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள 'ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசியிருக்கிறார்.

அதில், செல்லூர் ராஜூ கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரையில் ஆளும் தி.மு.க.வுக்கு எதிரான மன நிலையில் மக்கள் இருப்பதை காணமுடிகிறது. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற செயல்பாடுகளால் மக்கள் கடும் கோபத்துடன் இருப்பதால், இந்த தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். இரட்டை இலையை பொறுத்தவரையில் தீர்ப்பு தங்களுக்குதான் சாதகமாக வரும். ஆகையால் சின்னம் முடக்கப்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

அ.தி.மு.க.வுக்கு யாரும் 'ஓனர்' கிடையாது. எங்களை பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமி தான் 'பாஸ்'. அவருடைய வழிகாட்டுதலில் செயல்படுகிறோம். அ.தி.மு.க. யாருக்கும் அடங்கி போகவேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும். வருங்காலங்களில் குடும்ப கட்சியான தி.மு.க.வை வீழ்த்தி சாமானிய மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அ.தி.மு.க. புதிய சரித்திரத்தை படைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல, நிகழ்ச்சி தொகுப்பாளரின் சமகால அரசியல் மற்றும் பல்வேறு கேள்விகளுக்கும் அவருக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் பதில் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com